Wednesday, 25 May 2011

இந்திய அரசுக்கு எச்சரிக்கை






மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (17.05.2011 செவ்வாய்க்கிழமை) காலை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் சென்னை, தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
              கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
இந்திய அரசுக்கு எச்சரிக்கை!
.தி.மு.. தீர்மானம்!
மிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்துக்குப் பொன்மகுடம் சூட்டி விட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம், பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம், இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்து விட்டது.
நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது. அரசின் எதேச்சாதிகாரப் போக்கையும், ஊழலையும் எதிர்த்து, தமிழ்நாட்டின் நலன்களையும், ஜனநாயகத்தையும், பாதுகாப்பதற்கான பாதையைச் செப்பனிட்டதில், மறுமலர்ச்சி தி.மு.. தந்திட்ட அளப்பரிய பங்கு, மக்கள் மனதில் தனித்ததோர் தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற உண்மையை, எவராலும் மறைத்து விட முடியாது.
எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது.
புதிய அரசின் கடமை
விவசாயிகளுடைய வாழ்வு சீர்குலைந்து நொறுங்கி, விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் நலனைப் பாதுகாப்பதன் மூலமே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக, மிகப்பெரிய கேள்விக்குறியாகி விட்ட நதிநீர் ஆதாரங்களின் உரிமையைக் காத்தல், அமைந்து உள்ள அரசின் தலையாய கடமை ஆகும்.
999 ஆண்டுகளுக்குச் சட்டப்படியான உரிமை உள்ள, பென்னி குக் கட்டி உள்ள முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கும், புதிய அணை என்ற பெயரால், தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு விளைவிப்பதற்கும் திட்டமிட்ட கேரள அரசின் முயற்சிகளைச் சட்டப்படியாகவும், மத்திய அரசைத் தலையிடச் செய்வதன் மூலமாகவும், அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
காவிரி உரிமையைப் பெறவும், பாம்பாற்றில் கேரள அரசு கட்ட முயலும் அணையைத் தடுக்கவும், நெய்யாறு இடதுகரைச் சேனல், செண்பகவல்லி தடுப்பு அணைப் பிரச்சினைகளில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டவும், உரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களை, பன்னாட்டுக் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளும், இலங்கைக் கடற்படையினர் வந்து தாக்குவதும், சுடுவதும், படுகொலை செய்வதும், தடுத்து நிறுத்தப்பட, இலங்கை அரசுக்கு, இந்திய அரசு, கடுமையான எச்சரிக்கை விடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழ் இனப் படுகொலை : இந்திய அரசுக்கு எச்சரிக்கை
இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழ் இனப் படுகொலை செய்த போர்க்குற்றங்களை, .நா. பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு, ஆதாரங்களோடு அறிக்கையாகத் தந்து உள்ளது.
அந்த அடிப்படையில், இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மேலும் உரிய முறையில் விசாரணை செய்து, இக்கொலைபாதகத்துக்குக் காரணமான மகிந்த ராஜபக்சே, அவனது கூட்டாளிகள், சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை .நா. மன்றமும், ஜனநாயக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் இனக்கொலையை சிங்கள அரசு நடத்தியதில், சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் இயங்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கும், முழுப்பங்கு உண்டு என்பதையும், ரடார் உள்ளிட்ட ஆயுதங்களை இலங்கையின் முப்படைகளுக்குத் தந்தும், ஆயிரக்கணக்கான கோடி பணத்தைக் கொடுத்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகளை அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைத்து, தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு காரணமாகி விட்ட உண்மையை மறைத்து, பிரச்சினையைத் திசை திருப்பவும் நடைபெறும் முயற்சிகளை, தமிழ் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
.நா.வின் மூவர் குழு தந்த அறிக்கைக்கு எதிராக, 2009 இல், .நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை அரசு கொண்டு வந்த பாராட்டுத் தீர்மானத்தை, இந்திய அரசின் முழு உதவியோடு, நிறைவேற்றிய அக்கிரமத்தைப் போல, மீண்டும் இந்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசு, தீவிரமாக முயற்சிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு செய்த துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது.
முள்ளிவாய்க்கால் படுகொலையையும், இத்தகைய அழிவைத் தடுப்பதற்காகத் தங்கள் உயிர்களைத் தந்திட்ட முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளையும் நினைவு கூறும் இந்த நேரத்தில்,வெந்து புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில், சூட்டுக்கோலைத் திணிப்பது போல், மேலும் துரோகத்தை இந்திய அரசு செய்யுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு தமிழகத்தில் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, இதனால் விபரீத விளைவுகள் நேரும் எனவும், இந்திய அரசுக்கு இந்தக் கூட்டம் எச்சரிக்கை விடுக்கிறது.
சட்டமன்றக் கட்டடத்தை மாற்றக் கூடாது
தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டதும், தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது என்றாலும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உண்மையான திராவிட இயக்கமாக, அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நனவாக்கும் இயக்கமாக, அவர் வகுத்த எளிமை, நேர்மை, தன்னலம் இன்மை, ஜாதி, மத, வேறுபாடு இன்றி அனைவரையும், சகோதர பாசத்துடன், அரவணைக்கும் பாங்கு, தாய்த்தமிழகத்திலும், தரணியிலும் வாழும் தமிழர் உரிமை நலன் காக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் கடமையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும்.
வருகின்ற 22 முதல் 28 வரை, ஒரு வார காலம், தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி கொடி வாரத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தீர்மானித்து உள்ளது.
தீர்மானம் எண்: 2
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேயின் சிங்கள இனவாத அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சே அரசு நிறுத்தப்பட்டுத் தண்டனை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைளை .நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் இனப் படுகொலை நடத்திட சிங்கள அரசுக்கு உதவி செய்து, தமிழர்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, தற்போதும் இலங்கை அரசுக்கு உதவிடும் வகையில், .நா. அறிக்கைப் பிரச்சினையில் செயல்படக் கூடாது என்றும், தமிழக அரசு, தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 3
கடுமையான விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போடுவது போல, ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடனேயே, ஒன்பதாவது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு, இக்கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது

No comments:

Post a Comment