Wednesday 18 May 2011

VAIKO - Puratchi puyal




சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கட்டடத்தை மாற்றக் கூடாது என்று ம.தி.மு.க ‌தீ‌ர்மா‌ன‌ம் ‌நிறைவே‌‌ற்‌றியு‌ள்ளது.
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ம.தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் கூட்ட‌த்‌தி‌ல், தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டதும், தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது எ‌ன்று ‌தீ‌‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எனினும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று‌ம் ம.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும் படிக்க

No comments:

Post a Comment