Wednesday 18 May 2011

Farmers welfare is VAIKO's concern


தமிழகத்தில் விவசாயிகளின் நலனை அரசு பாதுகாக்க வேண்டும் என்று ம.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ம.தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் கூட்ட‌த்‌தி‌ல் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்முறை தேர்தல் களத்தில் ம.தி.மு.க பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது. தமிழ்நாட்டின் நலன்களையும், ஜனநாயகத்தையும், பாதுகாப்பதற்கான பாதையைச் செப்பனிட்டதில், மதிமுக தந்திட்ட அளப்பரிய பங்கு, மக்கள் மனதில் தனித்ததோர் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வு சீர்குலைந்து நொறுங்கி, விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நலனைப் பாதுகாப்பதன் மூலமே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும்.
குறிப்பாக, மிகப்பெரிய கேள்விக்குறியாகி விட்ட நதிநீர் ஆதாரங்களின் உரிமையைக் காத்தல், அமைந்து உள்ள அரசின் தலையாய கடமை ஆகும்.
முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கும், புதிய அணை என்ற பெயரால், தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு விளைவிப்பதற்கும் திட்டமிட்ட கேரள அரசின் முயற்சிகளைச் சட்டப்படியாகவும், மத்திய அரசைத் தலையிடச் செய்வதன் மூலமாகவும், அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு ஈடுபட வேண்டும் எ‌ன்று ம.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

No comments:

Post a Comment